Jeevan Amar Term Plan - 855

வழக்கமாக, சேமிப்பு என்று வரும்போது, ​​பெரும்பாலானோர் அரசாங்க திட்டங்கள் மற்றும் வங்கி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். நிச்சயமாக, சேமிப்பு மற்றும் முதலீடு கடினமான காலங்களில் நமக்கு உதவுகின்றன.  குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் நிதி வலிமைக்காக சந்தையில் பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இருப்பினும், LIC-யின் திட்டங்கள் (LIC Policy) பாதுகாப்பானதாகவும் சிறந்ததாகவும் கருதப்படுகின்றன. எதிர்காலத்தில் உங்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கக்கூடிய எல்.ஐ.சியின் அப்படிப்படட் சில திட்டங்களைப் பற்றி காணலாம். 
ஜீவன் அமர் திட்டம் (Jeevan Amar Plan) -  LIC -ன் ஜீவன் அமர் திட்டம் 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கானது. பாலிசியின் மச்சூரிட்டி வயது அதிகபட்சம் 80 ஆண்டுகள் ஆகும். இந்த பாலிசி வாடிக்கையாளருக்கு மரணம் வரை ஆயுள் பாதுகாப்பு அளிக்கிறது. பாலிசி காலம் 10 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் ஆகும். புகைபிடிப்பவர்களும் இந்த பாலிசியில் கவர் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், புகைப்பிடிப்பவர்களின் பிரீமியம் அளவு அதிகமாகும். பிரீமியம் ஆண்களை விட பெண்களுக்கு சற்று குறைவாக உள்ளது. இதில் அதிக தொகையை காப்பீடு செய்ய விரும்பும் நபர்களுக்கும் அதில் பெரிய தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளருக்கு 1 கோடி ரூபாய் தொகையில் 20% வரை தள்ளுபடி கிடைக்கும்.
மற்ற காப்பீட்டுத் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் இந்த திட்டமான பாலிசிதாரர்களுக்கு கூடுதல் பலன்களையும் அதிகப்படியான லாபத்தை அளிக்கக்கூடியது.
8 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைய முடியும். இதில் இரண்டு வகையான மரணத்திற்கு பின்பு கையில் வரும் பணம் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பாலிசிதாரர் காப்பீட்டு காலத்தில் இறக்கும்பட்சத்தில் நாமினி பணத்தை மொத்தமாகவோ 5 அல்லது 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு தவணைகளாகப் பிரித்தோ வாங்கிக் கொள்ளலாம் (மொத்தமாக வாங்கி செலவழித்து விடாமல் 15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது)
சிறப்பம்சங்கள்:
1.இப்பாலிசிகளின் ப்ரீமியத்தை பாலிசிகாலம் முழுவதும் செலுத்தலாம் அல்லது விரைவாக செலுத்தி முடிக்கலாம் அல்லது ஒரே தவணையிலும் செலுத்தி விடலாம்
2. இப்பாலிசிகள் 18 வயது முதல் 65 வயது வரை உடையவர்கள் எடுக்கலாம். பாலிசிதாரரின் 80 வயது வரை காப்பீடு பெறலாம். அதாவது 20 வயதுக்காரர் பாலிசி எடுத்தால் அதிகபட்சமாக 60 ஆண்டுகள் காப்பீடு பெறலாம். 50 வயதுக்காரருக்கு 30 ஆண்டுகள் அதிகபட்ச காப்பீட்டுக் காலம்
3. இப்பாலிசிகள் Accidental Rider, புகை பிடிக்காதோருக்கு ப்ரீமியம் குறைவு போன்ற அம்சங்களும் உள்ளன.
4. மற்ற எல்லா பாலிசிகளையும் போல பெண்களுக்கான ப்ரீமியம் ஆண்களின் ப்ரீமியத்தை விட குறைவு. குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 50 லட்சம். அமரில் 25 லட்சம்
பாலிசிதாரர்கள் காப்பீட்டுக் காலம் முழுக்க ஒரே காப்பீட்டுத் தொகையை (level sum assured) தெரிவு செய்யலாம் அல்லது அதிகரிக்கும் முறையை தெரிவு செய்யலாம்

Key Features of LIC Jeevan Amar Policy

  • 2 Options to choose the life cover
    • Level sum assured
    • Increasing sum assured
  • LIfe insurance available till the age of 80
  • Flexibility in choosing the death benefit payout
    • In lump sum 
    • In installments over 5,10 or 15 years
  • Flexibility to choose how long to pay premiums
    • Single premium
    • Regular Premium
    • Limited Premium
  • Accident Death Benefit rider is available
  • Lower premium rates for non-smokers
  • Lower premium rates for women
  • Tax Benefits


Post a Comment

0 Comments