டெக் டர்ம் பிளான் (Tech Term plan) ஒரு pure risk premium plan ஆகும். LIC -ன் இந்த ஆன்லைன் டர்ம் பாலிசி, ஆஃப்லைன் பாலிசிகளை விட மலிவானது. பாலிசி முதிர்வு காலம் முடிவடைவதற்கு முன்னர் பாலிசிதாரரின் மரணம் ஏற்பட்டால், பாலிசியின் தொகை குடும்பம்பத்திற்குக் கிடைக்கிறது. பாலிசியின் கொள்கை காலம் 10 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரையாகும். 18 வயது முதல் 65 வயது வரையிலான நபர்கள் இந்த திட்டத்தை எடுக்கலாம். LIC -ன் டர்ம் பிளானில், பாலிசி கவரேஜிற்கான அதிகபட்ச வயது வரம்பு 80 ஆக வைக்கப்பட்டுள்ளது. நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, அமெக்ஸ் கார்டு, UPI, IMPS மற்றும் இ-வாலட் மூலம் புதுப்பித்தல் (renewal) மற்றும் பிரீமியம் செலுத்தலாம்.
0 Comments